'மார்கழி திங்கள்" என்ற திரைப்படம் மூலமாக பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது.இந்தப் படத்தினை இயக்குநர் சுசீந்திரன் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
புதுமுகங்களான சியாம் செல்வன் மற்றும் ரக்ஷனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதோடு இயக்குநர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் இந்தத் திரைப்படத்தில் நடிக்கிறார்.
இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா கிராமத்து காதல் கதை மூலமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தது போல மனோஜ் பாரதிராஜாவும் "மார்கழி திங்கள்" திரைப்படத்தை கிராமத்து காதல் கதையாக எடுக்க இருக்கிறாராம்,அதேநேரம் அனைத்து வயதினரையும் கவரும் வகையில்,காதல் எமோஷன் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக இது இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.