அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "சமரன்".இப்படத்தில் நடிகர் சரத்குமார்,விதார்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் அதேவேளை இவர்களோடு இணைந்து நடிகர் ஆர். நந்தா, ஜோர்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஒரு இராணுவ அதிகாரி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடியான கதையே "சமரன்" திரைப்படம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பல இடங்களில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் , "சமரன்" திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் , அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் எனவும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.