சினிமாவை பொறுத்தவரையில் கதாநாயகர்களுக்கு நிகரான சம்பளம் கதாநாயகிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பல கதாநாயகிகள் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ள விடயம் வைரலாகி வருகிறது.
அதாவது நடிகை பிரியங்கா சோப்ரா குறித்த பேட்டியில் "நீண்ட வருதாங்களாக நான் எதிர்பார்த்து கேட்டது, ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுங்கள் என்பது,அது தற்போது நடந்துள்ளது. இந்த இடத்திற்கு வருவதற்கு எனக்கு 20 ஆண்டுகள் ஆகிவிட்டது." என்று கூறியுள்ளார்.இது குறித்து நடிகை நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது, "பிரியங்கா சோப்ரா ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெற்றதன் மூலம் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறார். ஹாலிவுட் ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை அவர் வாங்கியதாக தெரிவித்து இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது, மேலும் நாங்கள் எல்லாம் இன்னும் உழைத்துக்கொண்டு இருக்கிறோம். நமது சினிமா துறையில் ஹீரோவிற்கு இணையான சம்பளம் குறித்து எந்த பேச்சும் எழுவது இல்லை. கதாநாயகர்களுக்கு நிகரான சம்பளம் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் நாள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளமை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.