பிரபல இசையமைப்பாளரான G .V .பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.
இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், போன்ற முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.
அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 'அடியே' திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இரசிகர்களை கவர்ந்திருந்தது.
இதையடுத்து இந்த திரைப்படத்தின் முதல் பாடலான 'வா செந்தாழினி' பாடல் இன்றைய தினம் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில் 'வா செந்தாழினி' பாடலின் கிளிம்ப்ஸ் காணொளியை நடிகர் G. V பிரகாஷ் அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்த காணொளி தற்போது இரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.