குறித்த இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. இதேவேளை இந்த பெண்மணி இது தொடர்பில் தெரிவிக்கையில் அதிகாரிகள் கேட்டுக் கொண்டால் கூட தன்னால் இனி இந்த வீட்டை விட்டு வேறு எங்கேயும் சென்று வசிக்க முடியாது என்று உறுதியாக கூறியுள்ளார்.மேலும் இங்கு இருப்பதைவிட நான் வேறு எங்கேயும் சந்தோஷமாக இருந்ததில்லை என்றும் அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
1918ம் ஆண்டு இதே வீட்டில் இந்த பெண்மணி பிறந்துள்ளார். தான் பிறந்த நாளில் இருந்து இதுவரை அவர் அந்த வீட்டை விட்டு வேறு எங்கும் சென்று வசிக்கவில்லை என்பதுடன் அப்பெண்மணிக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு பேரக் குழந்தைகளும் 14 கொள்ளு பேரன்களும், 11 எள்ளு பேரன்களும் உள்ளனர்.
22 பிரதமர்கள் மற்றும் 5 முடியாட்சிகளை தனது வாழ்நாளில் பார்த்துள்ள இந்த பெண் 1941ம் ஆண்டு திருமணமான பின்னும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் மாதம் தனது 105வது பிறந்த நாளை அப்பெண்மணி கொண்டாட உள்ளார் என்பதுடன் தான் 105 வருடங்களாக வாழ்ந்த அதே வீட்டிலேயே அவரின் 105து பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது