உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள SK- 21 திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடிக்க உள்ளார்.இதேவேளை இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் அங்கு அண்மையில் ஜி20 மாநாடு நடைபெற்றதால், பாதுகாப்பு கருதி படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்தநிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவருடன் இரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அத்தோடு இவரின் 'அயலான்' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.