சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்புப் பண்டங்களில் பால் கோவாவும் ஒன்றாகும். எனவே சுவையான முறையில் பால் கோவாவை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதைப் பற்றி இன்றைய சமையல் குறிப்புப் பகுதியில் தெரிந்துகொள்வோம். இதற்குத் தேவையான பொருட்கள்,
பசுப்பால் - 500 மில்லிலீட்டர்
எலுமிச்சம் பழச்சாறு - அரை தேக்கரண்டி
சர்க்கரை - 4 தேக்கரண்டி
நெய் - 3 மேசைக்கரண்டி
முதலில் அகலமான ஒரு பாத்திரத்தில் பசுப்பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்கு கொதித்த பின்னர் எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பிறிதொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நெய் கொதித்த பின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள பசுப்பாலையும், சர்க்கரையையும் சேர்க்கவும்.
சர்க்கரை கரைந்து வரும் வரை நன்கு கிளற வேண்டும். இந்த கலவை சரியான பதத்திற்கு வந்த பின்னர் அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி விரும்பிய வடிவில் வெட்டி எடுத்தால் சுவையான பால்கோவா தயார்.