நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக,தற்போது 'ரகு தாத்தா' என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.இந்த திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அதிக கவனம் பெற்றது.
இந்நிலையில், 'ரகு தாத்தா' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக 'ரகு தாத்தா' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.
மேலும்,அந்த பதிவில், " ரகுதாத்தா" படப்பிடிப்பு நிறைவுற்றது.உங்கள் இதயத்தை அதிர வைக்கும் புரட்சிக்காக காத்திருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.