இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
‘ஆனந்தி’ கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு திரையுலகினரின் கவனத்தைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘அங்காடி தெரு’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அஞ்சலி.
இந்த நிலையில் நடிகை அஞ்சலியின் 50வது திரைப்படத்தின் Title உடன் கூடிய First look போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது. இயக்குநர் அசோக் வேலாயுதம் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ’ஈகை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு தரண் குமார் இசையமைக்கிறார். அதேவேளை சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘இரட்டா’ என்ற திரைப்படத்தில் அஞ்சலி நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.