நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஜப்பான்.இப்படம் நடிகர் கார்த்தியின் 25 வது திரைப்படமாகும்.இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.
நடிகர் கார்த்தியின் பிறந்தநாளினை முன்னிட்டு ஜப்பான் படத்தின் Intro Videoவை படக்குழு அண்மையில் வெளியிட்டிருந்தது.இந்நிலையில் இந்த காணொளி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்த நிலையில், ஜப்பான் திரைப்படத்தின் டீசர் குறித்த புதிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த டீசர் 30மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.