37 வயதாகும் அம்பாதி ராயுடு சென்னை அணிக்கு நடப்பு IPL தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் ஆரம்பத்தில் மும்பை அணிக்காக ஆடியிருந்தார்.
அதன் பிறகு சென்னை அணியில் இணைந்து தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். சென்னை அணியின் நம்பிக்கை மிகுந்த வீரராக அவர் மாறியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான இன்றைய இறுதிப்போட்டியுடன் IPL தொடரில் இருந்து விடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் மும்பை அணியில் இடம்பிடித்து, தனது அபார துடுப்பாட்டத்தால் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். மும்பைக்காக அவர் ஆடிய விதத்தை பார்த்து விட்டுத்தான் சென்னை அணி இவரை ஏலத்தில் எடுத்தது.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடியதால் 2012 ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார்.
இருந்த போதிலும் 2013 ஆம் ஆண்டில் சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.
சென்னை மற்றும் மும்பை அணிகள் மூலம் , இதுவரையில் ஐந்து முறை கிண்ணங்களை வென்றுள்ள நிலையில் , இன்றிரவு 6வது முறையாகவும் கிண்ணத்தை வெல்ல உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது உத்தியோகப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் , இந்த தொடரை தாம் மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக தெரிவித்து, அனைவருக்கும் நன்றி கூறியுள்ள ராயுடு , தமது முடிவில் மாற்றம் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.