'நட்புன்னா என்னானு தெரியுமா'திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கவின்.
அதன் பின்னர் வெளியான 'லிஃப்ட்', 'டாடா' போன்ற திரைப்படங்கள் கவினுக்கு இரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில்,நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்யப் போவதாகவும் இவர்களது திருமணம் இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறும் எனவும் ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் நேற்றைய நாள் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திரையுலக மற்றும் சின்னத்திரையுலக பிரபலங்கள் நடிகர் கவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் நடிகர் கவின் - மோனிகா திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.