நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய 'ஜெயிலர்' விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பைப் பெற்று வருகிறது.
அனிருத் இசையமைத்த இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இத்திரைப்படம் வெளிவந்து 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகளவில் ரூபாய். 510 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.