எமது சருமத்தை வீட்டில் இருந்தவாறே எளிமையான முறையில் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
சரும வறட்சியிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு போதுமான அளவு நீரை அருந்த வேண்டும். அதிகளவில் நீரை அருந்துவதனால் சருமம் மென்மையாகவும், இளமையாகவும் காணப்படும்.
வாரத்தில் இருமுறை வெந்நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதன் மூலம் எமது சருமத்தில் காணப்படும் அதிக எண்ணெய் தன்மை குறைந்து சருமம் பொலிவாகக் காணப்படும்.
கல் உப்பு கலந்த நீரில் குளிப்பதனால் சருமத்தில் காணப்படும் அழுக்குகள் அனைத்தும் மறைந்து சருமம் பளபளப்பாகக் காணப்படும். அத்துடன் சருமத்தில் காணப்படும் சுருக்கங்களும் நீங்கி சருமம் இளமையாகக் காணப்படும்.
எனவே மேற்சொன்ன இலகுவான வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகைப் பாதுகாத்துக் கொள்வோம்.