இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல திரைப்படங்களுக்கு இசைமைத்துள்ளார்.இதனிடையே மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தை இயக்கி,கதாநாயகனாகவும் அறிமுகமானார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வீரன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்
ஹிப்ஹாப் ஆதிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
இவர் மேலாண்மை பிரிவில் இசை தொழில் முனைவோர் என்பதை மையமாக வைத்து தற்போது பி.எச்.டி. ஆராய்ச்சி படித்து முடித்துள்ளார்.இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதிக்கு முனைவர் பட்டம் இன்று வழங்கப்பட்டுள்ளது.
முனைவர் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஹிப்ஹாப் ஆதி, "சென்னையை மையமாக வைத்து இளைஞர்கள், மாணவர்களுக்கு என மியூசிக்கல் அகாடமி திறக்க இருப்பதாகவும்,இதற்காக தான் ஆராய்ச்சி படித்து பட்டம் பெற்றேன் எனவும் கூறியுள்ளார்.
ஹிப்ஹாப் ஆதிக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.