நடிகர் பார்த்திபன் இயக்கி - நடித்திருந்த ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை 15ம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இத்திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில் 'இரவின் நிழல்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மாயாவா தூயவா' பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நன்றி தெரிவிக்கும் விதமாக பார்த்திபன் பேசியுள்ள விடயம் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது ""வணக்கம் நான் பார்த்திபன் மகிழ்வுடன், நிலவில் சந்திரயான் இறங்கும் போது விஞ்ஞானிகள் மட்டும் அல்ல, அந்த கட்டிடத்தில் பணிபுரியும் அனைவருமே, மகிழ்ந்திருப்பார்கள். இஸ்ரோவில் பணிபுரிந்த நிறைய ஊழியர்களில் ஒருவன் போல, அந்த படத்திற்காக உழைத்த ஊழியர்களில் ஒருவனாக, நானும் மகிழ்கிறேன்... பெருமை கொள்கிறேன். இப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றி" என தெரிவித்துள்ளார்.