இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.இதையடுத்து தேசிய விருது பெறும் திரைப்படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது.இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து 'புஷ்பா' திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில்,இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்,இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர்,"தேசிய விருது பட்டியலில் இடம்பிடித்ததைத் தொடர்ந்து இளையராஜா சேரிடம் சென்று ஆசிபெற்றேன்.நீங்கள் கொடுத்த அனைத்து உத்வேகத்திற்கும் நன்றி இளையராஜா சேர்.அதுவே என்னை தேசிய விருதிற்கு அழைத்து சென்றது"என்று பதிவிட்டுள்ளார்.
தேவிஸ்ரீ பிரசாத்,இசைஞானியை சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.