பண்டைய காலங்களில் இருந்து, பழங்களை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நமக்குச் சொல்லப்பட்டு வருகிறது.
நீங்கள் தினமும் ஒரு பழத்தை சாப்பிடும்போது அல்லது உணவில் பழங்களை சேர்த்துகொள்ளும்போது, உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் .
சில பழங்களில் இயற்கையான சர்க்கரைகள் இருந்தாலும், அவற்றில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதை குறைத்துக்கொள்ளும் .
பழங்களில் இயற்கையாகவே அறிவாற்றல் செயற்பாடு மற்றும் மனநலத்துடன் தொடர்புடைய ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன.
பெரும்பாலான பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உங்கள் அன்றாட உணவில் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலான பழங்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளாகும், அவை உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன.
ஆகவே தினமும் ஒரு பழத்தை உட்கொண்டு ,உங்கள் ஆரோக்கியத்தினை மேம்படுத்திக் கொள்ளுங்கள் .