‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரை இல்லாத அளவு இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பொலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
3டி முறையில் சரித்திர திரைப்படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.'கங்குவா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்,மோஷன் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து,'கங்குவா' திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்தும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், 'கங்குவா' திரைப்படம் இரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது," கங்குவா" திரைப்படத்தின் இரண்டு சீன்களை பார்த்தேன்,அற்புதமாக இருந்தது.சிறுத்தை சிவா வெறித்தனமாக வேலை பார்த்து வருகிறார்.சூர்யா வேற லெவலில் நடித்திருக்கிறார்.சினிமா இரசிகர்களுக்கு 'கங்குவா' திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று கூறியுள்ளார்.