'ஜெயிலர்' திரைப்படத்தின் ரிலீசுக்குப்பின் இளையதளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'லியோ' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
லியோ திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதோடு பொலிவூட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் மிஷ்கின், கௌதம் மேனன் அர்ஜுன், மன்சூர் அலிகான் போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு எங்கே நடக்கும் என்று மன்சூர் அலிகானிடம் கேட்ட போது “'லியோ' ஓடியோ லோன்ச் நிலாவுல நடக்க போகுது” என நக்கலாக பதிலளித்துள்ளார்.இதேவேளை இத்திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு சென்னை அல்லது மலேசியாவில் நடக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.