நீரின்றி இவ்வுலகம் அமையாது என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் கூறியுள்ளார். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் இவ்வுலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அந்த பொன்மொழி பொருந்தும்.
கோடைகாலங்களில் போதியளவான நீர் இல்லாதுபோனால் நாம் பாரிய இன்னல்களை எதிர்நோக்க நேரிடும். மனிதர்கள் மாத்திரமின்றி மிருகங்கள் மற்றும் பறவைகளும் அதே இன்னல்களை எதிர்கொள்கின்றன. நீர் இன்றி வறண்டு, மயங்கி கிடந்த சின்னஞ்சிறு சிட்டுக்குருவிக்கு மனித நேயத்துடன் நபர் ஒருவர் நீர் கொடுத்து உதவிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மயங்கி கிடந்த இந்த சிட்டுக்குருவிக்கு அருகில் சென்ற அந்த நபர் தண்ணீரை அதன் மீது ஊற்றும் போது மெதுவாக தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட அந்த சிட்டுக்குருவி தன் தாகம் தீரும் வரையில் தண்ணீரை குடித்து முடித்தது.
அதன் பின்னர் தனக்கு நீர் கொடுத்து மறுவாழ்வளித்த அந்த நபரின் கைகளில் சில நிமிடங்கள் ஓய்வெடுத்த பின்னர் அந்த சிட்டுக்குருவி அங்கிருந்து பறந்து சென்றுள்ளது.
குறித்த இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் சிட்டுக்குருவிக்கு நீர் வழங்கிய இந்த நபரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தும் வருகின்றனர்.