SooriyanFM Gossip - கே.எல். ராகுல் விலகல் - இந்திய அணிக்கு பின்னடைவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
461 Views
ஆசியக்கிண்ணத் தொடருக்கான இந்திய அணியின் முதலிரண்டு போட்டிகளில் துடுப்பாட்ட வீரர் கே.எல். ராகுல் விளையாடமாட்டார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உபாதையிலிருந்து குணமடைந்துவரும் கே.எல். ராகுல் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என தலைமை பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கே.எல். ராகுல் இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற IPL தொடரின் போது உபாதைக்கு முகங்கொடுத்தார். இவருடைய தொடைப்பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்த நிலையில், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதிலிருந்து குணமடைந்திருந்த போதும், முழு உடற்தகுதியின்றி ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழாமில் இடம்பிடித்திருந்தார்.
எவ்வாறாயினும் தற்போது இவரால் முதலிரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பல்லேகலையில் நடைபெறுவுள்ள போட்டிகளில் இவர் விளையாட மாட்டார் எனவும், சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதிபெற்றால் போட்டிகளில் விளையாடுவார் என டிராவிட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.