தெலுங்கு திரையுலகின் இளம் நடிகராக வலம்வரும் விஜய் தேவர்கொண்டா 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.
தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் பல இளம் இரசிகைகளை கவர்ந்து.இப்படத்தில் ராஷ்மிகா- விஜய் தேவர்கொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில்,நடிகர் விஜய் தேவர்கொண்டாவின் சமூக வலைதளப் பதிவை இன்று இரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
குறித்த பதிவில் விஜய் தேவர்கொண்டா இருவர் கைக்கோர்த்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'நிறைய நடக்கிறது.ஆனால்,இது உண்மையில் சிறப்பானது.விரைவில் அறிவிக்கிறேன்' குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவிற்கு நடிகர் விஜய் தேவர்கொண்டாவின் இரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.