குறித்த இந்த இருவரும் குழந்தைகளாக இருந்த சந்தர்ப்பத்தில் ஒரே குடும்பத்தினால் வெவ்வேறு இடங்களிலிருந்து தத்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த இரண்டு குழந்தைகளும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் என்ற உண்மை அண்மையில் தெரியவந்துள்ளதுடன் தற்போது இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு தத்தெடுக்கப்பட்ட இவர்கள் இருவரும் தங்கள் உண்மையான குடும்பத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக வளர்ப்புப் பெற்றோரின் அனுமதியுடன் DNA பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பரிசோதனையின் முடிவில் இவர்கள் இருவருடைய DNA பொருந்தியுள்ளது. இதன் மூலம் இவர்கள் இருவரும் ஒரே பெற்றோருக்கு பிறந்த அண்ணன் மற்றும் தங்கை என்பது உறுதியாகியுள்ளது.
இத்தனை நாள் தங்களுடைய இரத்த உறவோடு வாழ்ந்து வந்துள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்று இந்த சகோதரர்கள் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுமார் 22 வருடங்களின் பின்னர் தாங்கள் நிஜ சகோதரர்கள் என்பது இவர்களுக்கு தெரியவந்துள்ளதுடன் குறித்த சகோதரர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.