Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
அதிகாரபூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்த நயன்தாரா!

sooriyanfm gossip - அதிகாரபூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்த நயன்தாரா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

949 Views
தென்னிந்திய தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வருபவரும், "லேடி சூப்பர்ஸ்டார்" என்று இரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவருமான நயன்தாரா தற்பொழுது அதிகாரபூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்துள்ளார்.

"சூப்பர் ஸ்டார்" ரஜினி, "தளபதி" விஜய், சூர்யா என்று பல தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி உட்பட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள "ஜவான்" திரைப்படம் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து குழந்தைகளின் நலனில் அக்கறைகொண்டு குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா, சமூக வலைத்தளப் பக்கங்களில் அதிகளவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.

இதன்காரணமாக, தங்களது குழந்தைகளின் மகிழ்ச்சிகரமான தருணங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் மாத்திரமே தனது உத்தியோகபூர்வமான சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

இந்தநிலையில், நயன்தாரா தற்பொழுது அதிகாரபூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்துள்ளார். இதில் தனது முதலாவது பதிவாக தனது குழந்தைகளான உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் ஆகியோருடன் தானிருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோ பதிவினை சமூக வலைத்தளத்தில் இரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top