சிலருக்கு பாதம் மிகவும் வறண்டதாகவும், வெடித்தும் காணப்படும். இதை இயற்கையான முறையில் எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி அறிந்து கொள்வோம்.
1.வெதுவெதுப்பான நீரில் உங்களது பாதத்தினை அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் பாதங்களை துடைத்து விட்டு ஒரு சிறிய கிண்ணத்தில், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் கால்களில் பூசி , நன்கு தேய்த்து, 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
பின்பு அந்த பேக் சற்று உலர்ந்ததும், இரண்டு கால்களிலும் தடிமனான காலுறைகளை அணிந்து, ஒரு இரவு முழுவதும் பேக்கை அப்படியே விட்டு விட வேண்டும்.
மறுநாள் காலையில், உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதன்பிறகு ஒரு துணியால் துடைத்து காலில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல்லை பூசலாம்.
2. மருதாணி பவுடருடன் தேயிலை தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று பாதங்களை மென்மையாக்கும்.
3. உருளைக்கிழங்கை காய வைத்து பவுடராக்கி பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.
4. பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தன்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு பாதத்தில் உள்ள இறந்த செல்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மொய்ஸ்சுரைசிங் க்ரீமை பூசி , 20 நிமிடங்கள் வரை, அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யலாம்.