இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டிக்கு இருப்பு நாள் (Reserve Day) ஒதுக்கப்பட்டமை தொடர்பில் உண்மையிலேயே ஆச்சரியப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வூட் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோர் தெரிவித்தனர்.
நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பை கேட்டபோது மிகவும் ஆச்சரியமடைந்ததுடன் போட்டிகளை நாங்கள் ஏற்பாடு செய்வதில்லை. எனினும் அது குறித்து எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இருப்பு நாளில் போட்டியில் முடிவு ஏற்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டால் பிரச்சினையாக இருக்கும். ஆனால் அதுபற்றி அக்கறை கொள்ளாமல் தொடர்ந்து எவ்வாறு சிறப்பாக விளையாடுவது என்பது தொடர்பில் தங்கள் அணிகள் அணி கவனம் செலுத்தும் என இரு அணிகளின் பயிற்றுவிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4 தொடரின் மற்றோரு போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.