இந்த திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.இந்நிலையில்,'ஜெயிலர்' திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து,ரஜினியின் அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அந்தவகையில் ,ரஜினிகாந்தின் 171-வது திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும்,இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க,அனிருத் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை படக்குழு போஸ்டரை ஒன்றைப் பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த போஸ்டர் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.