மனித உடலின் இயக்கத்திற்கு காரணமாக இருப்பது இந்த எலும்புகளும் தசைகளும் தான்.தினசரி வேலைகளை செய்ய கடினமான நிலை உண்டாகிறது. பொதுவாக இந்த அளவிற்கு சிரமத்திற்கு உள்ளாகும் தசைகள், கை , கால், தொடை, மேல் முதுகு, கழுத்து போன்றவற்றில் இருக்கும் தசைகள் ஆகும்.
குறிப்பாக இவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது கழுத்து தசைகள் தான்.அவ்வாறு கழுத்து தசைகள் பாதிக்கப்படும் போது மாத்திரைகளால் அதன் வலியை குறைக்க அல்லது கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆகவே, இந்த நோய் வராமல் தடுக்கும் முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும்.
எடை குறையும் போது கழுத்து பகுதியில் இருக்கும் அழுத்தம் குறைகிறது. இதனால் அந்த பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் .
கழுத்து வலி ஏற்படும்போது, அதனை குறைக்க வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர் ஒத்தடம் செய்வது நல்ல பலனை கொடுக்கும். கழுத்து பகுதியில், வெந்நீரையும் குளிர்ந்த நீரையும் மாற்றி மாற்றி ஒத்தடம் கொடுக்கும்போது, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
வீக்கத்தை குறைக்கும் தன்மை பூண்டிற்கு இயற்கையாகவே உண்டு. ஆகவே கழுத்து தசைகளில் உண்டாகும் வீக்கத்தை குறைக்க பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் . இது ஒரு இயற்கை தீர்வாகும். பூண்டு எண்ணையை கழுத்து பகுதியில் தடவுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சிக்கும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உண்டு. இது கழுத்து பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, வலியை குறைக்கிறது. 1 துண்டு இஞ்சியை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக கொதித்தவுடன் அதனை எடுத்து வடிகட்டி குடிக்கும்போது கழுத்து வலி குறையும்.
வயது முதிர்வு, மற்றும் அழுத்தத்தின் காரணமாக கழுத்துத் தசைகள் பலவீனமடைந்தால் மேல் குறிப்பிட்டவற்றை பின்பற்றி கழுத்து வலியில் இருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள் .