Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
குழந்தைகள் விரும்பி உண்ணும் பால் கேக்..!

sooriyan gossip - குழந்தைகள் விரும்பி உண்ணும் பால் கேக்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

521 Views
இன்று நாவுக்கு சுவைதரும் பால் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பால் குடிப்பது என்பது பல குழந்தைகளுக்குப் பிடிக்காத ஒன்று.

அந்த பாலை வைத்து கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

அத்தோடு இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் சாப்பிட்ட பின், மீண்டும் மீண்டும் கேட்கும் அளவிற்குச் சுவையாக இருக்கும்.

பால் மற்றும் முட்டையில் அதிகமான சத்துக்கள் உள்ளதால் குழந்தைகள் இதை அதிகமாக சாப்பிடலாம்.

இப்போது செய்முறையை பார்கலாம்.

தேவையான பொருள்கள் - சர்க்கரை- 6 தேக்கரண்டி, வெண்ணிலா எசன்ஸ் – 3 தேக்கரண்டி பால் – 2 கப், முட்டை – 4

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டைகளை உடைத்து சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் மூன்று தேக்கரண்டி அளவிற்கு சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.

அதில் இரண்டு கப் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கிளறவும்.

பின்பு சர்க்கரை பாகு நன்கு கரைந்து நிறம் மாறி வரவேண்டும்.

அதன் பின்னர் இதனை கேக் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தை எடுத்து அதில் கலக்கிய முட்டை மற்றும் இரண்டு கப் அளவிற்குப் பால் சேர்க்க வேண்டும்.

அதில் மூன்று தேக்கரண்டி அளவிற்கு வெண்ணிலா எசன்ஸ் மற்றும் மூன்று தேக்கரண்டி அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இந்த கலவையை நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள சர்க்கரை பாகு கலவையில் சேர்த்து இதனை ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து அதில் நாம் கலக்கிய கலவைய உள்ள பாத்திரத்தை எடுத்து அதில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.

இதை 10 முதல் 20 நிமிடங்கள் வேக விட்டு எடுத்தால் சுவையான பால் கேக் தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top