விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் அண்டனி'. இந்த திரைப்படம் 15 திகதி திரையரங்குகளில் வெளியாவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனாலும் படத்திற்கு சில சட்டப் பிரச்சினைகள் ஏற்பட்டு படம் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அறிவித்த திகதியிலேயே வெளியாகிறது.
தமிழில் ஜவான் திரைப்படத்திற்கு பிறகு பேசும் படியாக எந்த திரைப்படமும் வெளிவராத நிலையில், 'மார்க் அண்டனி' மற்றும் 'சந்திரமுகி 2' ஆகிய திரைப்படங்கள் இந்த வாரம் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் VFX பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில் அது செப்டம்பர் 28 ம் திகதிக்கு தள்ளிப் போகிறது. இதன் காரணமாக 'மார்க் அண்டனி' திரைப்படத்திற்கு பெரிய அதிஷ்டமே அடித்திருக்கிறது.
அதாவது தமிழில் 'மார்க் அண்டனி' திரைப்படம் மட்டுமே தனியாக களமிறங்குகிறது. இதன் காரணமாக வசூலில் பெரிய சாதனை படைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.