கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தநிலையில் தனி வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் நடிகர் விஜய்.
மேலும்,தனது பெயரையோ புகைப்படத்தையோ தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடாது எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிற நிலைக்கு தான் ஆளாக்கப்பட்டு இருப்பதாக வருத்தத்துடன் சந்திரசேகர் வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்த நிலையில், இப்போதாவது நடிகர் விஜய் அப்பாவை சந்திப்பாரா என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து,தற்போது தனது தாய் மற்றும் தந்தையுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தளபதி 68 திரைப்படத்திற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த நடிகர் விஜய் சென்னை திரும்பிய நிலையில்,முதல் வேலையாக தனது தந்தையை சந்தித்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தனது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரையும்,அம்மாவையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.