ஆசிய கிண்ணத்தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளமை குறித்து தான் கவலை அடைந்துள்ளதாக அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொஹைப் அக்தர் தெரிவித்துள்ளதுடன் பாபர் அசாமின் தலைமைத்துவம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் உலககிண்ணப்போட்டிகளிற்கு முன்னர் பாபர் அசாம் தனது தலைமைத்துவத் திறனை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற பரபரப்பான போட்டியில் இலங்கை வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் சொஹைப் அக்தர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சஹீன் அப்ரீடியின் பந்துவீச்சினை இவர் பாராட்டியுள்ளதுடன் இலங்கை அணி விளையாடிய விதத்தை பார்த்து தான் வியந்ததாகவும் இலங்கை அணி இம்முறையும் ஆசியக்கிண்ணத்தை வெல்ல முழு தகுதியும் உள்ள அணி என்றும் அக்தர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியினர் பாகிஸ்தான் அணியினை விட சிறந்த அணியினர் எனவும் பாகிஸ்தானின் தோல்வி தனக்கு அவமானத்தை ஏற்படுத்துகின்றது எனவும் பாகிஸ்தான் அணி சிந்திப்பதற்கு நிறைய விடயங்கள் உள்ளன என்றும் அணியின் தலைமைத்துவம் தொடர்பில் ஏமாற்றமடைந்துள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.