முகம் பொலிவாகவும் இருப்பதற்காக நம்மில் சிலர் விலை உயர்ந்த கெமிக்கல்கள் கலந்த சில பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு .ஆனால் அனைவராலுமே விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாது.
தற்போது அதிகமானோர் இயற்கை வழி முறைகளை பின்பற்றுகின்றனர் .சமயலறையில் உள்ள பொருட்களை வைத்து தங்களின் அழகை மேலும் அழகு படுத்த விரும்புகின்றனர் .கெமிக்கல் கலக்காத பொருட்களை தமது சருமத்திற்கு கொடுக்கும் போது சருமம் பொலிவாகவும் ,இளமையாகவும் இருக்கும். பொதுவாக சருமத்தில் இறந்த செல்கள் இருப்பதால் முகம் பொலிவிழந்து காணப்படுகின்றது.
இவ்வாறு முகத்தில் உள்ள செல்களை நீக்க கட்டாயமாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.ஸ்க்ரப் மற்றும் ஸ்கரப்
செய்யும் முறைகள் பற்றி பார்க்கலாம் .முகத்தில் உள்ள செல்களை நீக்க சமையலறையில் அதிக பொருட்கள் உள்ளன அந்த பொருட்களை கொண்டே நமது முகத்தை பராமரித்து வந்தால் பார்லர் செல்ல வேண்டிய அவசியமே இல்லை ,நமது சருமத்தை பொலிவாகவும் ,ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள் இருக்கின்றன ,முதலில் ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி ஓட்ஸ் பொடியுடன் தேன் மற்றும் தயிரை கலந்து பேஸ்ட் போல தயாரித்த பின் ,முகத்தை ஈரப்படுத்தி தயாரித்து வைத்த பேஸ்டை தடவி சிறிது மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்,பின்பு வெது வெதுப்பான நீரினால் முகத்தை கழுவ வேண்டும்.
அதே போல ஒரு நன்கு கனிந்த பப்பாளியை மசித்து அதனுடன் தேனைக்கலந்து பேஸ்ட் போன்ற பதார்தத்துடன் செய்து கொள்ள வேண்டும், பின்பு முகத்தை நன்கு நீரினால் கழுவி,துடைத்த பின் தயாரித்து வைத்துள்ள பப்பாளி பேஸ்ட்டை முகத்தில் தடவி 10அல்லது 15 நிமிடம் மசாஜ் செய்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
பழுத்த வாழைப்பழத்தை மசித்துக் கொள்ள வேண்டும். அதில் சர்க்கரை சேர்த்து கலந்த பின் , ஈரப்பதமான முகத்தில் வாழைப்பழத்தை தடவி சிறிது நேரம் மென்மையாக சர்க்கரையுடன் மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
.
முதலில் ஒரு பௌலில் காபித் தூளை எடுத்துக்கொள்ளுங்கள் , பின்பு ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள் ,அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்தபின் சிறிது நேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரினால் கழுவ வேண்டும்.
.பொதுவாக ஸ்க்ரப்புகளை வாரத்திற்கு 2அல்லது 3 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக முதன்முறையாக ஒரு பொருளை சருமத்தில் பயன்படுத்த முன், அது சருமத்திற்கு ஏற்றதா என்பதை கண்டறிய,முதலில் கையில் தடவி பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட ஸ்க்ரப்புகள் அனைத்தும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக வெளியேற்றி, சருமத்தை பொலிவோடும்,பிரகாசமாகவும்,ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.