தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தனுஷின் 50-வது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்கிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,நடிகர் தனுஷ்,நடிகை ராதிகா மற்றும் சரத்குமாரை சந்தித்துள்ளார்.அதாவது, ராதிகா - சரத்குமார் தம்பதியின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார்.இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.