பால் கோவா செய்வதற்கு தேவையான பொருட்கள்,
* 1/2 லீட்டர் பெக்கட் பால் / மாட்டுப்பால்
* 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
* 2 ஏலக்காய் தூள்
* 1 டீஸ்பூன் நெய்
* 4 பாதாம், பிஸ்தா உடைத்தது. (விருப்பமெனில்)
ஒரு ஸ்டிக் பேனில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு ஒரு அளவான சிம்மில் வைத்து அடிக்கடி பாலை கிளறி விடவும். நன்கு பாலை சுண்டியதும் ஏலக்காய் தூள்,மற்றும் அளவான நெய் சேர்த்து கிளறி, உடைத்து வைத்த பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி இறக்கவும். தித்திக்கும் சுவையில் அருமையான பால்கோவா தயார் .
மிக குறைந்த விலையில் பால்கோவாவிற்கு தேவையான பொருட்களைக்கொண்டு கடையில் வாங்குவது போல அருமையாக இருக்கும்பால்கோவாவை மேற்குறிய வழிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே இலகுவாக செய்திடுங்கள்.
அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் செய்து கொடுத்திடலாம் .அத்துடன் பண்டிகை கால நாட்களிலும் ,பிறந்தநாள் மற்றும் விஷேட கொண்டாட்டங்களிலும் ,ஆரோக்கியமான முறையில் பால்கோவா செய்து கொடுத்து அசத்திடுங்கள்.