முடி உதிர்தலை போக்க கீழ்க்கண்ட இயற்கை முறைகளை நாம் பின்பற்றலாம்.
நமது தலையில் பொடுகுத்தொல்லை இருந்தால் முதலில் நாம் செய்ய வேண்டியது. தயிர்,தேசிக்காய்,காற்றாழையை எடுத்து ஒரு மிக்சியில் அடித்து ஷாம்பூ போன்ற பதத்துக்கு எடுத்து வைத்துக்கொள்ளவும் ,பின்பு நமது கூந்தலை ஈரப்படுத்தி மிக்ஸ் செய்து வைத்த கற்றாழை ஷாம்பூவை 5 அல்லது 10 நிமிடம் தலையில் மசாஜ் செய்த பின் கூந்தலை நன்றாக கழுவி விட வேண்டும் .
நீங்கள் தலை முடியை அலசிய பின் கூந்தலை வாரும்போது பெரிய பல் கொண்ட சீப்பு பகுதியை பாவிக்க வேண்டும் .அத்தோடு சுடு தண்ணீரில் தலை முடியை அலசுவது நல்லதல்ல ,சாதாரன நீரிலேயே அலச வேண்டும்.
மெல்லிய கூந்தல் இருப்பவர்கள் கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் பால் சேர்த்து மண்டை ஓட்டுப்பகுதியில் தடவி உங்கள் கை விரல்கள் படும் படி நன்றாக மசாஜ் செய்து வந்தால், கூந்தலின் வேர் பகுதி வலுவடைந்து உறுதியாவதோடு கூந்தல் அடர்தியாகும் , நீங்கள் பாவிக்கும் ஷாம்பு அதிக திரவ தன்மையாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு வெங்காயத்தை நறுக்கி அரைத்து அதன் சாற்றை மட்டும் பிழிந்து கொள்ளுங்கள். இப்பொழுது சாற்றை உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். வெங்காயச்சாறு கூந்தல் முழுமைக்கும் பரவட்டும்.பிறகு லேசான ஷாம்பூ கொண்டு கூந்தலை அலசி வாருங்கள். வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வரும் போது நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
இவ்வாறு மேற்குறிப்பிட்ட செய்முறைகளை பின்பற்றினால் ,உங்கள் கூந்தல் உதிர்தலை தடுத்து ,முடி வளர்ச் சியை ஊக்குவிக்க உதவும் .