பேரிச்சம்பழத்தில் உடல் வலிமையை அதிகரிக்கும் ஏராளமான சத்துகள் இருக்கின்றன.
தினமும் உங்கள் உணவில் பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .
ஏராளமான சத்துக்களை கொண்ட பேரிச்சம்பழத்தை தினமும் உட்கொண்டால், உங்கள் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம். இதில் இருக்கும் விற்றமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவிக்கொள்ளும் .
எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்கள் கூட தினசரி பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் .
பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
பேரிச்சம்பழத்தில் விற்றமின் ஏ, பி போன்றவை இருக்கின்றன. இவை, சருமத்தின் தன்மையை மிருதுவாக்கி , சுருக்கங்களை போக்கி கோடுகளை மறையச் செய்து உங்கள் அழகை அதிகரிக்கவும் உதவுகிறது .
இவ்வாறாக பேரிச்சம்பழத்தினை தேவையான அளவு உட்க்கொண்டு ,அதனால் கிடைக்க கூடிய ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் .