நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றித்திரைப்படமாக மாறியிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் எல்லா நட்சத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருந்தாலும் அதில் குறிப்பாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த விநாயகன் வர்மா தனது மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படத்தில் தனக்கென இரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
'மனசுலாயோ' என அவர்ஜெயிலரில் நடித்த வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகிஉள்ளது. இந்நிலையில் அவர் ஜெயிலர் படத்துக்காக 35 இலட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் நான் 35 இலட்சத்தைவிட 3 மடங்கு அதிகமாக சம்பளம் பெற்றேன் என அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
இவருக்கு ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும். இனிவரும் நாட்களில் அந்த அறிவிப்புக்கள் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.