ஒரு முறை இந்த கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி விட்டால் நம் முக அழகை முற்றிலும் பாதிக்கும், இதனை நீக்க கடைகளில் சில கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு.அவ்வாறு நாம் செய்வதால் முகத்தில் எல்லா இடங்களிலும் கரும்புள்ளிகள் பரவத் தொடங்கிவிடுகின்றது .முகத்தில் இருக்கும் மெல்லிய துவாரங்களின் வழியே அழுக்குகள் நுழைவதால் இது போன்ற பிரச்சினைகள் நாம் எதிர் நோக்குகின்றோம்.ஒரே வாரத்தில் சரி செய்யக்கூடிய சில வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
சாதம் வடித்த கஞ்சி இரண்டு தேக்கரண்டி,கஸ்தூரி மஞ்சள் அரை தேக்கரண்டி மற்றும் வெண்ணெய் அரை தேக்கரண்டி சேர்த்து முகத்தில் கருமை படர்ந்து இருக்கும் இடங்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்த பின்பு முகத்தை கழுவவும் இவ்வாறு வாரத்தில் 3 முறை செய்து வந்தால் முகத்தில் கருமை மறைந்து சருமம் பொலிவு பெறும்.
முதலில் கற்றாழையில் இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்,பின் அதில் வெள்ளை சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடம் கழித்து முகத்தை வேண்டும் .
அது போல 3 தேக்கரண்டி அரிசி மாவுடன் கற்றாழையில் இருக்கும் ஜெல்லை எடுத்து அதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும் .பின்பு இவையிரண்டையும் மிக்சியில் அரைத்து பேஸ்ட் போன்ற பதத்துடன் முகத்தில் பெக் போன்று தடவி கொள்ளலாம்,அதன் பின் முகத்தை நன்கு குளிர்ந்த நீரை கொண்டு கழுவிக்கொள்ளலாம்.
இது போல வாரத்திட்கு 2 அல்லது 3 முறை செய்து வருவதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும் , முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவாகவும் இருக்கும்.
இரண்டு தேக்கரண்டி தயிர், 1தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன் கருப்பு சீனியை சேர்த்து ,5 நிமிடம் முகத்தில் மிருதுவான முறையில் தேய்த்து வெதுவெதுப்பான நீரைக்கொண்டு கழுவ வேண்டும் .
இவ்வாறு தொடர்ந்து மேற்கூறிய விடயங்களை பின்பற்றினால்,முகத்தில் உள்ள அடையாளங்கள் மறைந்து, பொலிவடைந்து பிரகாசமாகக் காணப்படும்.