மாம்பழம் என்றாலே பெரும்பாலானோர் அதிகம் நாட்டம் காட்டும் பழவகைகளில் முதன்மையானதாகும் . அதிலும் அனைவருக்கு இந்த பருவகாலத்தில் இலகுவாக கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம்
நாங்கள் இதுவரை அதிகமாக பால் பாயாசம்,சர்க்கரை பாயாசம்,சேமியா பாயாசம்
சவ்வரிசி பாயாசம்,பாசி பருப்பு பாயாசம்,கடலை பருப்பு பாயாசம் என பல பாயாச வகைகளை சாப்பிட்டிருப்போம்.ஆனால் பழவகைகளை பயன்படுத்தி பாயாசம் நீங்கள் சாப்பிட்டிருக்கின்றீர்களா?
இபோது அனைவருக்கும் பிடித்த மாம்பழத்தை பயன்படுத்தி மாம்பழப் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தித்திப்பான மாம்பழச்சாறு - ஒரு கப்,
சர்க்கரை - அரை கப்
பால் - ஒரு லிட்டர்
சவ்வாரிசி - ஒரு கை பிடியளவு
சேமியா - ஒரு கை பிடி
கேசரி பவுடர் - சிறிதளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
முந்திரி, திராட்சை - ஒரு கை பிடியளவு
மில்க் மெய்ட் - 2 டேபிள்ஸ்பூன்,
மாம்பழ எசன்ஸ் (விரும்பினால்) - சில துளிகள்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
முதலில் முந்திரி, திராட்சையை நெய்யில் கருக்கவிடாமல் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும் ,
மீதமுள்ள நெய்யை விட்டு சேமியாவை போட்டு லேசாக வறுத்து தொடர்ந்து சவ்வாரிசியையும் போட்டு வறுக்கவும் அதன் பின்னர் அதில் பாலை ஊற்றி காய்ச்சவும்.
பால் சிறிது வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
பிறகு கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, மாம்பழச்சாற்றை சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி, முந்திரி - திராட்சை, மாம்பழ எஸன்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.
இப்போது சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.
நறுமணத்துடனும் , சிறுவர்களின் கண்களை கவரும் வகையில் மற்றும் இலகுவாக கிடைக்க கூடிய பொருட்களின் பாவனையுடன் சூப்பரான மாம்பழ பாயாசம் நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அவர்களின் மனமகிழ்வை கண்டு சந்தோஷமடையலாம்.