இத்திரைப்படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடிக்கின்றனர். அத்தோடு தமன் இசையமைத்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார். இதில் பாடல் காட்சிகளுக்காக மட்டும் 90 கோடி ருபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பிடித்துள்ள ‘ஜாபிலம்மா’ என்ற பாடல் சமூக வலைதளங்களில் கசிந்து படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் இருந்தது நீக்கும் பணிகளை படக்குழுவினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.
ஆனாலும் ஏற்கனவே ரசிகர்கள் இந்த பாடலுக்கு ரீல்ஸ், ஷோர்ட்ஸ் ஆகியவற்றை செய்து வெளியிட தொடங்கி விட்டனர். இதனால் இந்த பாடலை படக்குழுவினர் விரைவில் உத்தியோக பூர்வமாக வெளியிடுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.