வல்லாரையை உட்க்கொள்வதால் நினைவாற்றல் அதிகரிப்பதோடு அறிவுத்திறனை மேம்படுத்த தேவையான சத்துக்களையும் வழங்குகிறது . எனவே வல்லாரையை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்பியக் கடத்தியின் செயற்பாட்டை தூண்டிவிடுகிறது.
வல்லாரையை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலுக்கு போதுமான விற்றமின் சி கிடைக்கும். விற்றமின் சி யானது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க இரும்புச்சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
வல்லாரையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், தசைப் பிடிப்புகள், தசைக் காயங்கள் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
வல்லாரையை உட்கொண்டு வந்தால், அஜீரண கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை போன்றவை ஏற்படாமல் தடுக்கும். அதுவும் ஒருவர் கடுமையான மலச்சிக்கலை சந்தித்து வந்தால், வல்லாரை சூப் குடித்து வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.
விற்றமின் சி மனித உடலில் முக்கியமான பணியை செய்கிறது. அது உண்ணும் உணவில் இருந்து இரும்புச்சத்து உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. இரத்த சோகை என்பது இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் ஒரு நிலையாகும்.இரத்த சோகையில் இருந்து விடுபட வல்லாரையை உட்கொள்ளுங்கள்.
இவ்வாறாக வல்லாரையை உட்கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளை பெற்று ஆரோக்கியத்தினை மேம்படுத்தி கொள்ளுங்கள்.