SooriyanFM Gossip - விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,876 Views
பிரபல இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை 3 மணியளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா விஜய் ஆண்டனி சென்னையில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் 12ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றார். இவர் கடந்த சில நாட்களாகவே, மனஅழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அவதானித்த அவரது தந்தை நிலைமையறிந்து உடனடியாக தனது மகளை, உறவினர்களின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.