அண்மையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு நபரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மனிதர்களுக்கு பலவிதமான ஆசைகள் உள்ளன. எல்லோருடைய ஆசைகளும் பூர்த்திசெய்யப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக நடுத்தர குடும்பங்களில் வாழும் பல இளைஞர்களின் ஏராளமான கனவுகள் பூர்த்தியாகாமலேயே இருக்கின்றன.
விலையுயர்ந்த கார் ஒன்றின் அருகில் நின்று இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்த சந்தர்ப்பத்தில் அதன் உரிமையாளர் அந்த இடத்திற்கு வந்தவுடன் குறித்த இளைஞர் அங்கிருந்து செல்ல முற்பட்ட வேளை அந்த காரின் உரிமையாளர் அங்கிருந்து அந்த இளைஞரை விரட்டாமல், அவரது தொலைபேசியினை வாங்கி அவரை காருடன் சேர்த்து புகைப்படம் எடுத்து அவரை அரவணைத்துள்ளார்.
இந்த உணர்ச்சிகரமான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் பலரும் அந்த காரின் உரிமையாளருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.