ரசம் நம்முடைய தினசரி உணவில் இருக்கும் மிக முக்கியமான ஒன்று.மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம், கொள்ளு ரசம், எலுமிச்சை ரசம், புளி ரசம், என வகை வகையான ரசம் சாப்பிட்டிருப்போம்.இதில் வீட்டில் உள்ளவர்களுக்கு புளி ரசம் ஒரு முறை செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு வித்தியாசமான சுவை கொண்டது இந்த புளி ரசம்.
பொதுவாக ரசம் என்றாலே நம்முடைய ஜீரணத்தை வேகப்படுத்தி வயிறு அசௌகரியத்தை குறைக்கும்.வயிற்று பொருமல் வாயுத்தொல்லை,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் வராமல் தவிர்க்க உதவி செய்யும்.அப்படி ஒரு அருமையான ரசம் எப்படி ?பத்தே நிமிடத்தில் செய்யலாம் என்று பார்க்கலாம்.
ரசம் செய்ய தேவையான பொருட்கள்
புளி - 50 கிராம்,
சின்ன வெங்காயம் - 10
சீரகம் - ஒரு ஸ்பூன்
மிளகு - அரை ஸ்பூன்
பூண்டு - ஆறு பல்
கரிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தக்காளிப் பழம் - பாதி
முதலில் புளியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.புளியை நன்றாக கரைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அம்மி கல் அல்லது மிக்ஸியில் சீரகம், மிளகு, பூண்டு, பச்சை மிளகாய், கரிவேப்பிலை, தோல் உரித்த சின்ன வெங்காயம், கொத்தமல்லி இலை, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்பு கரைத்து வைத்திருக்கும் புலி தண்ணீரில், இடித்து வைத்து இருக்கும் பொருட்களை சேர்த்து கலந்து,அதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரை தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி விடுங்கள்,இப்போது சூப்பரான பச்சை புளி ரசம் தயார்.
பச்சை புளி ரசத்தின் மிக முக்கியமான பயனே வயிறுக்கு இதமாக இருப்பதோடு ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஜீரணத்துக்கு தேவையான நல்ல பக்டீரியாக்களை குடலில் உற்பத்தி செய்து சிறுகுடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்,இவ்வாறு நீங்களும் இலகுவான முறையில் ரசம் செய்து சாப்பிடுங்கள்.