உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டுகளிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை நடிகர் ரஜினிகாந்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கி கௌரவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி.இவர் தன் திறமையினாலும் ஸ்டைலினாலும் பல இரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இரசிகர்கள் இவரை 'சூப்பர் ஸ்டார்' என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்திற்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட் இன்று வழங்கப்பட்டுள்ளது.அதாவது, இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா நடிகர் ரஜினிக்கு வழங்கி கௌரவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதற்கு முன்பு அமிதாப் பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.