Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
கல்சியம் குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்.

Sooriyan FM Gossip - கல்சியம் குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

949 Views
இக் காலகட்டத்தில் நம் பழக்க வழக்கங்கள் மற்றும் உட்கொள்ளும் உணவுகள் காரணமாக நாம் அனைவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் , பலதரப்பட்ட நோய்களுக்கும் ஆளாகுகின்றோம். 

குறிப்பாக பெண்கள் கல்சிய குறைபாட்டால் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அதிகம் முகம் கொடுக்கின்றார்கள் .

மேலும் பெண்களில் சிலர் 30 வயயதிலேயே முதுகு வலி, மூட்டுவலி என்கிறார்கள். இதற்கு காரணம் கல்சியம் குறைபாடாகும் , எனினும் அந்நோய் முதிர்ச்சியை தொடும்வரை அவற்றை பொருட்ப்படுத்தாதிருப்போம் .

இது ஹார்மோன்களின் சுரப்பு, இரத்தக்குழாய் சீரான செயல்பாடு, தசைகள் சுருங்கி விரிதல், இதயத்துடிப்பு போன்ற உடல் இயக்கங்களுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்தாகும்.

குழப்பம், நினைவாற்றல் இழப்பு, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியில்லாது போவது, மன அழுத்தம், அடிக்கடி நகத்தில் பாதிப்பு ஏற்படுதல், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை கல்சியம் குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகள் ஆகும்.

கல்சியம் குறைபாடு ஏற்பட காரணம் நம் உடலில் தோல், நகம், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக தினமும் கால்சியத்தை இழந்து கொண்டிருக்கிறோம்.

சத்துள்ள உணவுகளை உண்ணாமை, செரிமானக் கோளாறுகளால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல் போவது, உயர் மற்றும் குறைந்த அளவு மெக்னீசியம் சத்து இருத்தல், சிறுநீரக செயலிழப்பு , விட்டமின் டி அளவு குறைதல் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு போன்ற காரணங்களால் உடலில் கல்சியம் குறைபாடு ஏற்படலாம்.

எனவே கல்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளை தினமும் உட்கொள்வதன் மூலமாக கல்சியம் குறைபாட்டை சீர் செய்யலாம்.

அந்தவகையில் வாரத்தில் ஒரு நாள் அல்லது முடிந்தால் தினசரியாயினும் பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

தினசரி 5 பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் கல்சியம் சத்து அதிகரிக்கும். அத்துடன் பாதாமில் உள்ள B2 விற்றமின் மற்றும் இரும்புச்சத்து, உறுதியான தசை வளர்ச்சிக்கு உதவும்.

கல்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.

மீன், ஆட்டு எலும்பு சூப் , நாட்டுகோழி போன்ற உணவுகளை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். இவை கல்சியம் சத்து எளிதில் உடலில் சேரவும், எலும்புகளில் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவும்.

குறைந்த விலையிலும், இலகுவாகவும் பெறக்கூடிய கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை போன்ற கீரை வகைகளையும் அத்தி, கொய்யா, தோடம் ,அன்னாசி, பப்பாளி, ஸ்டோபெரி, முந்திரி போன்ற பழவகைகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்தக்கொள்ள வேண்டும்.

இந்த உணவுகள் உடலில் சீரான இயக்கத்துக்கும் வளர்ச்சி மாற்றத்துக்கும் , ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன. இவ்வகை உணவுகளை நாமும் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top