புதினா இலைகள் எமக்கு கொடுக்க கூடிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .
புதினாவில் விற்றமின் சி அதிகம் உள்ளது. இதனால் புதினா நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நாம் தினமும் சாப்பிடும் உணவில் சிறிதளவு புதினாவை சேர்த்துக் கொள்வது நமது உடல் நலத்தை அதிகரிக்கும்.
புதினா இலைகளை வெறும் வாயில் மென்று விழுங்கும் போது, அவை வாயில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடுகிறது.இதனால் வாய் நறுமணத்துடன் இருக்க பெரிதும் உதவுகிறது.
அஜீரணத்தால் அவஸ்தை படும்போது, புதினா ஒரு சிறந்த தீர்வாகிறது. புதினாவை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது , செரிமானத்தை வலுப்படுத்த உதவுகிறது .
சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள், உங்கள் தினசரி உணவில் புதினாவை இணைத்துக் கொள்ளும் போது விரைவில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
புதினாவை அதிகமாக உட்கொள்வதால், கண் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே, புதினாவை, ஜூஸ் அல்லது சாலட் போன்ற வடிவத்தில் அதிகம் உட்கொள்வது நல்லது.
மிகவும் சோர்வாக அல்லது தளர்ச்சியாக காணப்படும்போது , புதினா எண்ணெய்யை சிறிதளவு எடுத்து நெற்றில் தேய்ப்பதால் உடலில் இருக்கும் நரம்புகள் புத்துணர்ச்சி அடைகின்றன.
தசை பிடிப்பு அல்லது தசைகளில் உண்டாகும் வலிகளை குறைக்க, புதினா எண்ணெய்யை சிறிதளவு வலி உள்ள இடத்தில் தடவ, விரைவில் வலி குறையும். புதினாவில் இயற்கையாகவே வலி நிவாரண தன்மை உள்ளது.
ஆகவே ஏராளமான மருத்துவக் குணங்களை உடைய புதினா இலைகளை உட்க்கொண்டு அதனால் கிடைக்க கூடிய நன்மைகளை பெற்று கொள்ளுங்கள் .