சாதாரணமாக மேலதிகாரிகளிடம் விடுமுறைக்கான அனுமதியினைப் பெற செல்லும்போது மனதில் தயக்கத்துடனேயே பலரும் செல்கின்றனர். இது போன்ற ஒரு சம்பவமே தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
10 நாட்கள் சுற்றுலா செல்வதற்காக விடுமுறை கேட்ட நிலையில் இரண்டு நிமிடத்திற்குள் அதற்கான சம்மதத்தினை பதிலாக வழங்கியமை எதிர்பாராத ஒன்றும் அது தமக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியதாகவும் அந்த ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த உரையாடல் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே மிகப் பெரும் அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சுற்றுலா செல்வதற்காக 10 நாட்கள் விடுமுறை வழங்குமாறும் அதன் பின்னர் மீண்டும் பணிக்கு திரும்புவேன் என்றும் அந்த ஊழியர் தனது உயரதிகாரிக்கு வாட்ஸ்அப் மூலமாக குறுஞ் செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார்.
இதற்கு அந்த அதிகாரி சம்மதம் தெரிவித்ததுடன் சந்தோசமாக சுற்றுலாவை அனுபவிக்கும்படியும் வாழ்த்துக்களை கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.